< Back
மாநில செய்திகள்
போடி அருகே கார் மோதி 2 பேர் படுகாயம்
தேனி
மாநில செய்திகள்

போடி அருகே கார் மோதி 2 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
20 Aug 2022 8:36 PM IST

போடி அருகே கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்

போடி அருகே உள்ள முந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 40). போடி புதூரை சேர்ந்தவர் காமராஜ் (49). இவர்கள் இருவரும் தேனியில் இருந்து மோட்டார்சைக்கிளில் போடிக்கு சென்று கொண்டிருந்தனர். மீனா விலக்கு பகுதியில் டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நின்றனர். அப்போது அந்த வழியாக வந்த கார், அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கருப்பையா மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்