செங்கல்பட்டு
கல்பாக்கம் அருகே சாலையோர மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் சாவு
|கல்பாக்கம் அருகே சாலையோர மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சாவு
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் அடுத்த வடபட்டினம் என்ற இடத்தில் புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென வலது பக்க சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதியது. இதில் கார் நொறுங்கிது.
காரில் பயணம் செய்த சரண்ராஜ் (வயது 24), மோகன்ராஜ் (வயது 23) ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெயிண்டர்கள்
அதே காரில் பயணம் செய்த பிரவீன், நந்தா, வேலு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரில் பயணம் மேற்கொண்ட இவர்கள் 5 பேரும் கேளம்பாக்கம் அருகே உள்ள கார் பழுது பார்க்கும் கடையில் பெயிண்டர்களாக பணிபுரிந்து வந்தனர். தீபாவளி விடுமுறையையொட்டி புதுச்சேரியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் கேளம்பாக்கம் திரும்பும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து கூவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.