< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது பேருந்து மோதி 2 பேர் பலி
|16 Dec 2023 7:06 AM IST
விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி ஆகினர்.
கள்ளக்குறிச்சி,
உளுந்தூர்பேட்டை அருகே சென்னை - திருச்சி 4 வழி சாலை உள்ளது. இந்த சாலையில் அறந்தாங்கி நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் சாலையின் எதிரே வந்த கண்டெய்னர் லாரியும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி ஆகினர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.