< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
சென்டிரலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது
|28 Jun 2023 1:03 PM IST
சென்டிரல் ரெயில் நிலையத்தில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் அங்கும், இங்கும் சுற்றித்திரிந்தார். இதையடுத்து, அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணான வகையில் பதிலளித்தார். இதனால், சந்தேகம் அடைந்து அவரது பையை வாங்கி சோதனை செய்தனர். அதில், 4 பிளாஸ்டிக் டப்பாக்களில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தை கண்டுபிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தோபா பிரதான் (வயது 26) என்பது தெரியவந்தது. பின்னர், கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.