< Back
மாநில செய்திகள்
சிறை வார்டர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்
சேலம்
மாநில செய்திகள்

சிறை வார்டர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்

தினத்தந்தி
|
14 Jan 2023 1:10 AM IST

இளம்பெண் பலாத்கார வழக்கில் கைதான சேலம் சிறை வார்டர்கள் 2 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இளம்பெண் பலாத்கார வழக்கில் கைதான சேலம் சிறை வார்டர்கள் 2 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறை வார்டர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் நரியனேரி அருகே உள்ள கரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருண் (வயது 30). சேலம் மாவட்டம் உத்தமசோழபுரத்தை சேர்ந்தவர் சிவசங்கர் (31). இவர்கள் இருவரும் சேலம் சிறை வார்டர்கள் ஆவர்.

இந்த நிலையில் அழகாபுரத்தை சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் சிறை வார்டர்கள் இருவரும் தன்னை பலாத்காரம் செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இது குறித்து போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமிபிரியா விசாரணை நடத்தி சிறை வார்டர்கள் 2 பேரை கைது செய்து, சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஆத்தூர் கிளைச்சிறையில் அடைத்தார்.

பணி இடைநீக்கம்

இந்த நிலையில் சிறை வார்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளது குறித்து போலீசார், சிறை சூப்பிரண்டுக்கு கடிதம் மூலம் அறிக்கை தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து இளம்பெண் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட சிறை வார்டர்கள் அருண், சிவசங்கர் ஆகிய 2 பேரை பணி இடைநீக்கம் செய்து சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன் உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து ஆத்தூர் கிளை சிறையில் உள்ள வார்டர்கள் 2 பேரிடம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதற்கான நகலை போலீசார் வழங்கினர்.

மேலும் செய்திகள்