சென்னை
கிண்டியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 பேர் காயம் - சிக்னல் கம்பம் சேதம்
|கிண்டியில் தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர் அபீன் ராஜா (வயது 23). இவர், நேற்று அதிகாலை பொழிச்சலூரில் இருந்து வடபழனி நோக்கி தனது காரில் சென்று கொண்டு இருந்தார். கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி எதிர்திசையில் வந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. பின்னர் அங்கிருந்த சிக்னல் கம்பத்தில் மோதி நின்றது.
கார் மோதியதில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த திவாகர் (30) மற்றும் நிவாஸ் (23) ஆகியோர் காயம் அடைந்தனர். சிக்னல் கம்பமும் சேதம் அடைந்தது. இது பற்றி தகவல் அறிந்துவந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார், காயம் அடைந்த 2 பேரையும் சிகிசைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.