< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்
கர்நாடகா அரசு பஸ்-வேன் மோதலில் 2 பேர் காயம்
|22 July 2022 11:17 PM IST
பொன்னை அருகே கர்நாடக அரசு பஸ்சும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.
திருவலம்
பொன்னை அருகே கர்நாடக அரசு பஸ்சும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.
திருத்தணியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்ட கர்நாடக மாநில அரசு பஸ் ோளிங்கர் வழியாக வேலூர் மாவட்டம் பொன்னையை நெருங்கிக்கொண்டிருந்தது.அப்போது பெங்களூருவில் இருந்து திருவள்ளூர் மாவட்டம், புதூர் மேடு பகுதியை நோக்கி சென்ற வேனும் கர்நாடக மாநில அரசு பஸ்சும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் ஆம்னி வேனை ஓட்டி சென்ற புதூர் மேடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 40), அருகில் அமர்ந்து சென்ற அவரது தம்பி முரளி (35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து பொன்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
==========