< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
முனிவிரோதம் தகராறில் 2 பேர் காயம்
|17 Jun 2022 11:33 PM IST
நாட்டறம்பள்ளி அருகே முனிவிரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் 2 பேர் காயம் அடைந்தனர்.
நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூர் செல்லியம்மன் கோவில் வட்டம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மகன் பழனி (வயது 34). அதே பகுதியை சேர்ந்த மணி மகன் கனகராஜ் (43). இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் நிலத்தின் அருகே இருந்த கனகராஜிடம் சென்று பழனி தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கனகராஜ் அருகில் இருந்த கல்லால் பழனியின் தலை மீது குத்தியுள்ளார். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.