< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
தமிழக அரசின் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு மாற்றம்

1 Sept 2023 10:04 AM IST
தமிழக அரசின் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,
தமிழக அரசின் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல் இருவரும் மத்திய அரசுப்பணிக்கு செல்கின்றனர்
மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சக செயலாளராக கிருஷ்ணனும், தொலைத்தொடர்புத்துறை செயலாளராக நீரஜ் மிட்டலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.