< Back
மாநில செய்திகள்
குட்கா விற்ற 2 பேர் கைது - 30 கிலோ பறிமுதல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

குட்கா விற்ற 2 பேர் கைது - 30 கிலோ பறிமுதல்

தினத்தந்தி
|
30 Nov 2022 4:56 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து 30 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் பகுதியில் உள்ள 2 பெட்டிக்கடைகளில் கவரைப்பேட்டை போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பெட்டிக்கடைகாரர்களான சண்முகவேல் பாண்டியன் (வயது 56), கதிர்வேல் (42) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்