< Back
மாநில செய்திகள்
கிணற்றில் விழுந்த 2 ஆடுகள் உயிருடன் மீட்பு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கிணற்றில் விழுந்த 2 ஆடுகள் உயிருடன் மீட்பு

தினத்தந்தி
|
18 Oct 2023 11:32 PM IST

கிணற்றில் விழுந்த 2 ஆடுகள் உயிருடன் மீட்கப்பட்டது.

கறம்பக்குடி அருகே புதுவளசல் கிராமத்தை சேர்ந்தவர் சரிதா. இவரது ஆடு அப்பகுதியில் உள்ள 50 அடி ஆழ கிணற்றில் விழுந்துவிட்டது. இதுகுறித்து அவர் கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், கறம்பக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் ஆட்டை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல் ஆலங்குடி அருகே மாங்கோட்டை கீழப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராசு. இவரது தண்ணீர் இல்லாத கிணற்றில் அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரது ஆடு தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டு ேமலே கொண்டு வந்தனர்.

மேலும் செய்திகள்