திருப்பூர்
வெறிநாய்கள் கடித்து 2 ஆடுகள் செத்தது
|வெறிநாய்கள் கடித்து 2 ஆடுகள் செத்தது
அனுப்பர்பாளையம்
திருமுருகன்பூண்டி ராக்கியாபாளையத்தை அடுத்த பாலாஜிநகர், பள்ளத்தோட்டம் பகுதியில் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு ஏராளமான ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இந்த நிலையில் அங்கு வந்த வெறிநாய்கள் ஆடுகளை கடித்துக் குதறியது. இதில் 2 ஆடுகள் பரிதாபமாக ெசத்தது. காயம் அடைந்த ஒருசில ஆடுகளுக்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து வெறிநாய்கள் ஆடுகளை கடித்து கொன்று விடுவதாகவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், கடந்த 2 மாதங்களில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ராயப்பன், ராமசாமி, பாய், பழனிச்சாமி ஆகியோருடைய தோட்டத்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வெறிநாய்கள் கடித்து கொன்று விட்டன. எனவே இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.