< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
வயலில் மர்மமான முறையில் ெசத்துக்கிடந்த 2 பெண் மயில்கள்
|14 Aug 2022 11:41 PM IST
வயலில் மர்மமான முறையில் 2 பெண் மயில்கள் செத்துக்கிடந்தன.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பிரம்மதேசத்தை சேர்ந்தவர் மணிவேல்(வயது 75). இவருக்கு சொந்தமான வயலில் நேற்று முன்தினம் மதியம் 2 பெண் மயில்கள் மர்மமான முறையில் செத்துக்கிடந்தன. இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து உடனடியாக மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், இறந்து கிடந்த மயில்களை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், அவற்றை வாலிகண்டபுரம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் கால்நடை டாக்டர் மூலம் மயில்கள் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் வனப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. மயில்கள் எப்படி ெசத்தன? என்பது குறித்து வனத்துறையினரும், போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.