< Back
மாநில செய்திகள்
கோயம்பேட்டில் மதுக்கடை பாரில் மது விற்ற ஊழியர்கள் 2 பேர் கைது

கோப்புப்படம்

மாநில செய்திகள்

கோயம்பேட்டில் மதுக்கடை பாரில் மது விற்ற ஊழியர்கள் 2 பேர் கைது

தினத்தந்தி
|
8 Jan 2023 6:40 AM IST

கோயம்பேட்டில் மதுக்கடை பாரில் மது விற்ற ஊழியர்கள் 2 பேரை போலீசார கைது செய்தனர்.

கோயம்பேடு,

கோயம்பேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் பார்களில் விதிமுறைகளை மீறி பதுக்கி மது விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து கோயம்பேடு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் கோயம்பேடு, காளியம்மன் கோவில் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த பார் ஊழியர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாண்டியராஜ் (வயது 26), சுதாகர் (29), ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 39 பிராந்தி பாட்டில்கள், 41 பீர் பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்