< Back
மாநில செய்திகள்
இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டிய திமுக மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்..!
மாநில செய்திகள்

இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டிய திமுக மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்..!

தினத்தந்தி
|
3 Sept 2023 9:20 AM IST

இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டிய திமுக மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி புகைப்படத்துடன் 'இன்பநிதி பாசறை' என்ற வாசகத்துடன் வருகின்ற செப்டம்பர் 24-ம் தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும் இன்பநிதியை எதிர்காலமே என்று குறிப்பிட்டும் மண்ணை பிளக்காமல் விதைகள் முளைப்பதில்லை போராட்ட களம் இன்றி வெற்றிகள் கிடைப்பதில்லை என்ற வாசகத்துடன் புதுக்கோட்டை நகரபகுதி முழுவதும் திமுகவை சேர்ந்த இருவர் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போஸ்டர்களை பார்த்த பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், புதுக்கோட்டையில் இன்பநிதி புகைப்படத்தை பயன்படுத்தி போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கலை, இலக்கியப் பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் மணிமாறன், மீனவர் அணி துணை அமைப்பாளர் திருமுருகன் ஆகியோரை, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தற்காலிகமாக நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்