< Back
மாநில செய்திகள்
தி.மு.க.வில் 2 மாவட்ட செயலாளர்கள் மாற்றம்
மாநில செய்திகள்

தி.மு.க.வில் 2 மாவட்ட செயலாளர்கள் மாற்றம்

தினத்தந்தி
|
27 Feb 2024 2:55 PM IST

மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னை,

தி.மு.க.வில் 2 மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் ,

சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இளைய அருணா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாவட்ட பொறுப்பாளராக ஆர்.டி.சேகரும், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் விடுவிக்கப்பட்டு மாவட்ட பொறுப்பாளராக ஜெகதீஷனும் நியமிக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்