< Back
மாநில செய்திகள்
2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
திருவாரூர்
மாநில செய்திகள்

2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

தினத்தந்தி
|
11 Oct 2022 12:15 AM IST

2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

ேவதாரண்யம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கொரடாச்சேரி முதல் திருவாரூர் வரை குடிநீர் திட்ட பிரதான நீர் உந்து குழாயினை மாற்றி அமைக்கும் பணி, திருவைக்காவூர் தலைமை நீரேற்று நிலையத்தில் வால்வுகள் பொருத்தும் பணி மற்றும் தஞ்சை மாவட்டம் சுந்தரபெருமாள் கோவில் ரெயில்வே கேட் அருகில் 900 மி.மீ. எம்.எஸ் குழாய் வெல்டிங் செய்தல் போன்ற காரணங்களால் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் உள்ளாட்சி அமைப்புகள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இந்த தகவலை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்