< Back
மாநில செய்திகள்
திருச்சி - ஈரோடு பயணிகள் ரெயில் சேவையில் 2 நாட்கள் மாற்றம்
மாநில செய்திகள்

திருச்சி - ஈரோடு பயணிகள் ரெயில் சேவையில் 2 நாட்கள் மாற்றம்

தினத்தந்தி
|
4 Oct 2024 10:32 AM IST

திருச்சி - ஈரோடு பயணிகள் ரெயில் சேவையில் 2 நாட்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம் சாவடிபாளையம் ரெயில்வே யார்டு அருகே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் (வண்டி எண் 16611) பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ரெயில் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு கரூர் வரை மட்டும் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்