< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
செம்மொழி பூங்காவில் 2 நாள் உணவு திருவிழா - இலங்கை உணவுகளை ஆர்வத்துடன் ருசித்த பொதுமக்கள்
|24 Jun 2023 11:03 PM IST
உணவு திருவிழாவிற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் வருகை தந்தனர்.
சென்னை,
சென்னை செம்மொழி பூங்காவில் நடைபெறும் 2 நாள் உணவுத் திருவிழா தொடங்கியுள்ளது. இந்த உணவு திருவிழாவில் புலம் பெயர்ந்தவர்களின் கைவண்ணத்தில் பல வகையான உணவு வகைகள் சமைக்கப்பட்டன.
அதில் ஓலைப்புட்டு, சுசியம், கலகலா, தொதல், சிறுதானிய உருண்டை, புட்டு நாட்டுச் சர்க்கரை, இறால் குழம்பு, சிக்கன் ரொட்டி, சிக்கன் கொத்து என பல்வேறு வகையான இலங்கை உணவுகளை பொதுமக்கள் வாங்கி ருசித்தனர்.
இங்கு 20 ரூபாய் முதல் குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்பட்டதால் பொதுமக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த உணவு திருவிழாவிற்கு வருகை தந்த தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோரும் அங்கிருந்த சில உணவு வகைகளை ஆர்வத்துடன் ருசித்தனர்.