< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டியில் பயனாளிகளுக்கு ரூ.2¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் பயனாளிகளுக்கு ரூ.2¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்

தினத்தந்தி
|
24 Aug 2023 7:26 PM IST

கும்மிடிப்பூண்டியில் பயனாளிகளுக்கு ரூ.2¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கீழ்முதலம்பேடு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியின் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராசன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் உமாமகேஸ்வரி, கீழ்முதலம்பேடு ஊராட்சிமன்ற தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ரூ.2 கோடியே 23 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

முன்னதாக துறைகள் சார்பாக மேற்கொள்ளபட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்