< Back
மாநில செய்திகள்
கீரப்பாக்கம் ஊராட்சியில் ரூ.2¼ கோடியில் சாலை அமைக்கும் பணி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கீரப்பாக்கம் ஊராட்சியில் ரூ.2¼ கோடியில் சாலை அமைக்கும் பணி

தினத்தந்தி
|
11 July 2023 4:29 PM IST

கீரப்பாக்கம் ஊராட்சியில் ரூ.2¼ கோடியில் சாலை அமைக்கும் பணிக்காக பூமி பூஜை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள கீரப்பாக்கம் ஊராட்சியில் தமிழக முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 19 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் கீரப்பாக்கம் யாதவர் தெரு 3 ரோடு சந்திப்பு பகுதியில் இருந்து முருகமங்கலம் 4 ரோடு சந்திப்பு வரை சாலை அமைக்க நேற்று கீரப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வசுந்தரி ராஜேந்திரன் தலைமை தாங்கி சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலாஜி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கீரப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த தி.மு.க. கிளை செயலாளர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்