< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
60 அடி ஆழ கிணற்றில் விழுந்த 2 மாடுகள் உயிருடன் மீட்பு
|19 Aug 2023 11:38 PM IST
சிப்காட் அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்த 2 மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டன.
சிப்காட் அருகே உள்ள முத்துடையான்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் இவரது காளை மற்றும் பசுமாடு அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தபோது சண்டையிட்டன. அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள 60 அடி ஆழ கிணற்றில் மாடுகள் தவறி விழுந்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல்ரகுமான் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கிணற்றில் விழுந்த 2 மாடுகளையும் கயிற்றால் கட்டி உயிருடன் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.