< Back
மாநில செய்திகள்
கள்ளக்காதல் விவகாரத்தில் 2 குழந்தைகள் கொடூர கொலை - படுகாயம் அடைந்த கள்ளக்காதலியும் சாவு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கள்ளக்காதல் விவகாரத்தில் 2 குழந்தைகள் கொடூர கொலை - படுகாயம் அடைந்த கள்ளக்காதலியும் சாவு

தினத்தந்தி
|
11 Feb 2023 8:10 PM IST

கள்ளக்காதல் விவகாரத்தில் 2 குழந்தைகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் படுகாயம் அடைந்த கள்ளக்காதலியும் இறந்தார்.

பொன்னேரி அருகே உள்ள இருளிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கம்பெனியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த துவரிகாபார் (வயது 30) வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுமித்ராபார் (21). இவர்களுக்கு சிவா (4) என்ற மகனும் ரீமா(1) என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி இருளிப்பட்டியில் தனி அறையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த குட்டுலு வீட்டுக்கு கள்ளக்காதலி சுமித்ராபார் மற்றும் அவரது 2 குழந்தைகளும் சென்றனர்.

அப்போது இருவருக்கும் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில் 2 குழந்தைகளை வெட்டியும் கள்ளக்காதலியின் தலையை வெட்டி விட்டு குட்டுலு தப்பிச்சென்று விட்டார். இதில் 2 குழந்தைகளும் பரிதாபமாக இறந்தனர்.

சுமித்ராபார் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சுமித்ராபார் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். தலைமறைவான குட்டுலுவை பிடிக்க ஆவடி போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்