< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
2 குழந்தைகள், தாய் மீது தாக்குதல்
|1 May 2023 12:15 AM IST
தியாகதுருகம் அருகே 2 குழந்தைகள், தாயை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தியாகதுருகம்:
தியாகதுருகம் அருகே உள்ள பொரசக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி சந்திரா (வயது 39). இவர், அதே ஊரில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் பிடிப்பதற்காக பிளாஸ்டிக் குடத்தை வைத்து விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, அவரது பிளாஸ்டிக் குடம் அருகில் உள்ள கிணற்றில் கிடந்தது. இது குறித்து கேட்ட சந்திராவை அதே கிராமத்தை சேர்ந்த மொட்டையன் மகள் மலர், அய்யாசாமி, இவரது மனைவி பாப்பாத்தி, மகன் ரமேஷ் ஆகியோர் தாக்கினர். இதை தடுக்க வந்த சந்திராவின் மகள் மற்றும் மகனுக்கும் அடி விழுந்தது. இதுகுறித்து சந்திரா கொடுத்த புகாரின் பேரில் மலர் உள்பட 4 பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.