< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
களியக்காவிளை அருகே 2 கார்கள், மோட்டார் சைக்கிள் அடுத்தடுத்து மோதல்
|15 March 2023 12:15 AM IST
களியக்காவிளை அருகே 2 கார்கள், மோட்டார் சைக்கிள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன/
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே உள்ள ஒற்றாமரம் பகுதியில் நேற்று மதியம் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு வாலிபர் திடீரென சாலையை கடக்க முயன்றார். இதனால் பின்னால் வந்த கார் டிரைவர் திடீர் பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். அப்போது அந்த கார் நிலைதடுமாறி சாலையோரம் நின்ற மற்றொரு கார் மீது மோதியது. இதற்கிடையே காரை பின்தொடர்ந்து வந்த ஒரு மோட்டார் சைக்கிளும் கார் மீது மோதி கீழே விழுந்தது. இந்த சம்பவத்தில் 2 கார்களில் இருந்தவர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் நின்ற பொதுமக்கள் மீட்டு திருவனந்தபுரம், நெய்யாற்றின்கரை போன்ற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
---