< Back
மாநில செய்திகள்
2 பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி டிரைவர்கள் வாக்குவாதம்
கடலூர்
மாநில செய்திகள்

2 பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி டிரைவர்கள் வாக்குவாதம்

தினத்தந்தி
|
4 Sept 2023 1:41 AM IST

திட்டக்குடி அருகே நேர பிரச்சினையால் 2 பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திட்டக்குடி,

விருத்தாசலத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திட்டக்குடி நோக்கி நேற்று மதியம் 2.30 மணி அளவில் 2 தனியார் பஸ்கள் புறப்பட்டது. இதில் நேர பிரச்சினை தொடர்பாக 2 பஸ் டிரைவர்களுக்கு இடையே போட்டி உருவானது. இதனால் 2 பஸ் டிரைவர்களும் ஒருவரை ஒருவர் முந்திச்செல்ல முயன்றனர்.

இந்த நிலையில் ஆவினங்குடி பஸ் நிறுத்தத்தில் வந்த போது ஒரு பஸ் டிரைவர் மற்றொரு பஸ்சை முந்தி செல்லவிடாமல், குறுக்கே நிறத்தினார். அப்போது 2 பஸ் டிரைவர்கள், கண்டெக்டர்களும் பஸ்சை விட்டு கீழே இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து கீழே இறங்கினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவினங்குடி கிராம நிர்வாக அலுவலர் கலைவாணி மற்றும் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் நடத்தினர்.

இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக டிரைவர்கள் சோழராஜன், கல்யாணசுந்தரம், கண்டெக்டர்கள் தேவராஜ், சக்திவேல், கோபி அகியோர் மீது ஆவனங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பஸ்களையும் பறிமுதல் செய்தனர். நேர பிரச்சினையால் 2 தனியார் பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி டிரைவர்கள் மற்றும் கண்டெக்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்