< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 மாட்டுவண்டிகள் பறிமுதல்
|26 Jun 2023 1:24 AM IST
அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 மாட்டுவண்டிகள் பறிமுதல்
திருவையாறு பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மருவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அனுமதியின்றி மாட்டுவண்டியில் திருவையாறு அடுத்த கடுவெளியை சேர்ந்த சந்திரசேகரன் மகன் பாண்டி (வயது26), கடுவெளி கூத்தாடி மதகை சேர்ந்த பாலையன் மகன் முரளி (24) ஆகிய 2 பேரும் மணல் ஏற்றி வந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் 2 பேரும் மாட்டுவண்டிகளை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார் மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.