< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
இளம்பெண்ணிடம் நூதன முறையில் நகை திருடிய 2 சிறுவர்கள் கைது
|18 Jun 2023 12:15 AM IST
கோவில்பட்டியில் இளம்பெண்ணிடம் நூதன முறையில் நகை திருடிய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி:
கழுகுமலை அருகே உள்ள சுந்தரேஸ்வரபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ் மகள் அர்ச்சனா (வயது 23). இவர் கோவில்பட்டியில் உள்ள அரசு பொதுத்தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். பயிற்சி முடிந்ததும் வழக்கம் போல நேற்று முன்தினம் மாதா கோவில் தெருவில் உள்ள படித்துறை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த 2 சிறுவர்கள் அவர் மேல் மோதியபடி அர்ச்சனா கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்கச் சங்கிலியை நூதனமாக திருடி விட்டு தப்பி ஓடினர். இதுகுறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நகை திருட்டில் ஈடுபட்டது சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து நகையை மீட்டனர்.