< Back
மாநில செய்திகள்
542 மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது
திண்டுக்கல்
மாநில செய்திகள்

542 மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது

தினத்தந்தி
|
3 Oct 2023 1:15 AM IST

கொடைக்கானலில் 542 மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்தநிலையில் கொடைக்கானலில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணகுமார், பால் ஜெயசீலன் தலைமையிலான போலீசார் வில்பட்டி பிரிவு பகுதியில் திடீர் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 பேர் ஜீப்பில் வைத்து மது விற்றது ெதரியவந்தது. அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். 2 பேரில் ஒருவர் சிக்கினார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், அவர் வில்பட்டியை சேர்ந்த சிவமுருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிவமுருகனை போலீசார் கைது செயதனர். அவரிடம் இருந்து 528 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பிஓடிய வில்பட்டியை சேர்ந்த ராஜ் (வயது 60) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல் பேத்துப்பாறை பகுதியில் மதுவிற்ற சவுந்தரபாண்டியை (45) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்