< Back
மாநில செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை -  2 பேர்  கைது
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை - 2 பேர் கைது

தினத்தந்தி
|
13 Jun 2023 11:42 PM IST

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ஆற்காட்டில் உள்ள கொல்லப்பாளையம் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 37), கூலி தொழிலாளி. அதேபோல், ஆற்காடு காய்கார தெருவை சேர்ந்தவர் சந்திரன் (55). இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர்கள் 13 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டின் சுவர் ஏறி குதித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், சுவர் ஏறி குதித்து முனியாண்டி வெளியே செல்வதை சிறுமியின் பெற்றோர் பார்த்துள்ளனர். பின்னர் சிறுமியிடம் விசாரித்ததில், தனக்கு ஏற்பட்ட நிலையை பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகின் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் முனியாண்டி, சந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்