< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
குன்றத்தூர் அருகே கொள்ளை வழக்கில் 2 பேர் கைது; 22 பவுன் நகை பறிமுதல்
|9 Oct 2022 4:15 PM IST
குன்றத்தூர் அருகே கொள்ளை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொள்ளை
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தது. இது குறித்து குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.
கைது
இந்த நிலையில் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கத்தை சேர்ந்த உதயகுமார் (வயது 37), அரி பிரசாத் என்ற அரி (19) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் குன்றத்தூர் பகுதிகளில் பூட்டி உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்ததை ஒப்பு கொண்டனர்.
அவர்களிடம் இருந்து 22 பவுன் நகை, 145 கிராம் வெள்ளி பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.