< Back
மாநில செய்திகள்
தஞ்சையில் நடந்த என்ஐஏ சோதனையில் 2 பேர் கைது
மாநில செய்திகள்

தஞ்சையில் நடந்த என்ஐஏ சோதனையில் 2 பேர் கைது

தினத்தந்தி
|
30 Jun 2024 11:57 PM IST

கைதான இருவர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

சென்னை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அதிகாலை 5 மணி முதல் சோதனை மேற்கொண்டனர்.

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட 'ஹிஜ்புர் தகர்' இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது, அந்த அமைப்புகளுக்கு உடந்தையாக செயல்பட்டது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தஞ்சாவூரில் 4 இடங்களில் நடந்த என்ஐஏ சோதனையில் 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சாலியாமங்கலத்தை சேர்ந்த முஜிபுர் ரகுமான், அப்துல் ரகுமான் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான இருவர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனையின் போது என்ஐஏ அதிகாரிகள் சில பென்டிரைவ், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய போது உள்ளூர் போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

மேலும் செய்திகள்