< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டியில் பெண் தாசில்தாரை அவதூறாக பேசிய வழக்கில் 2 பேர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் பெண் தாசில்தாரை அவதூறாக பேசிய வழக்கில் 2 பேர் கைது

தினத்தந்தி
|
28 April 2023 2:53 PM IST

கும்மிடிப்பூண்டியில் பெண் தாசில்தாரை அவதூறாக பேசிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவுக்கான தாசில்தார் பிரீத்தி. கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதியின்றி தாசில்தார் அலுவலகத்திற்குள் நுழைந்த சிலர் அவரை அவதூறாக பேசி பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் நிலப்பிரச்சனை தொடர்பாக தாசில்தாரிடம் பேச வந்தவர்கள், அவரை கோபப்படும் அளவுக்கு பேச வைத்து அவருக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தாசில்தார் பிரீத்தி அளித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் தாசில்தாரை பணி செய்யவிடாமல் தடுத்து அவருக்கு மிரட்டல் விடுத்ததாக 4-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், மேற்கண்ட வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் பெரிய ஒபுளாபுரம் சத்யா (வயது 30), காயலார்மேடு நந்திவர்மன் (27) ஆகியோரை சிப்காட் போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்