< Back
மாநில செய்திகள்
பெண் தற்கொலை வழக்கில் 2 பேர் கைது
திருவாரூர்
மாநில செய்திகள்

பெண் தற்கொலை வழக்கில் 2 பேர் கைது

தினத்தந்தி
|
23 July 2023 12:15 AM IST

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பணம் மோசடி செய்ததால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மன்னார்குடி:

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பணம் மோசடி செய்ததால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெண் தற்கொலை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஜீயர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி சந்திரகலா (வயது 45). இவர்களுடைய மகன் கிருஷ்ணமூர்த்தி. கணவர் இறந்துவிட்டதால் மகன் கிருஷ்ணமூர்த்தியுடன் சந்திரகலா வசித்து வந்தார். மகன் கிருஷ்ணமூர்த்தியை வேலைக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக சந்திரகலா, மன்னார்குடி ருக்மணிகுளம் மேல் கரையை சேர்ந்த முருகானந்தம்(34) மற்றும் மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை பேட்டை பகுதியை சேர்ந்த கவியரசன்(35) ஆகியோரிடம் ரூ 1 லட்சத்து 61 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்ட இருவரும் கிருஷ்ணமூர்த்தியை வெளிநாட்டுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களிடம், சந்திரகலா பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த சந்திரகலா கடந்த 20-ந் தேதி அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்டார்.

2 பேர் கைது

அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதி வைத்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு முருகானந்தமும், கவியரசனும் தான் காரணம் எனவும், தனது மகனை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றியதால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதி இருந்தார்.

இதன் அடிப்படையில் மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம், கவியரசன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்