< Back
மாநில செய்திகள்
செல்போன் கடை ஊழியர்களை மிரட்டிய 2 பேர் கைது
விழுப்புரம்
மாநில செய்திகள்

செல்போன் கடை ஊழியர்களை மிரட்டிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
28 July 2022 2:06 AM IST

செல்போன் கடை ஊழியர்களை மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டிவனம்,

திண்டிவனம் திருவள்ளுவர் தெருவில் ரேணுகுமார் (வயது34) என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் திகில் என்கிற ஜெகதீசன் என்பவர் பழுதடைந்த தனது செல்போனை கொடுத்து அதனை சரிசெய்து தருமாறு கூறியுள்ளார். அதன்படி செல்போன் சரி செய்து கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெகதீசன் தனது ஆதரவாளர்களுடன் ரேணுகுமார் கடைக்கு சென்றார். பின்னர் அவர் தனது செல்போனை சரியாக சரி செய்து கொடுக்கவில்லை என கூறி அங்கிருந்த ஊழியர்களை மிரட்டியதோடு, கடையில் உள்ள பொருட்களை அடித்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனத்தை சேர்ந்த மணிகண்டன் (28), ஆசிப் பாஷா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஜெகதீசனை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்