< Back
மாநில செய்திகள்
ரெயில்வே மேம்பால பணிக்கான இரும்பு கம்பிகளை திருடிய 2 பேர் கைது
சேலம்
மாநில செய்திகள்

ரெயில்வே மேம்பால பணிக்கான இரும்பு கம்பிகளை திருடிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
17 Oct 2023 1:35 AM IST

சேலத்தில் ரெயில்வே மேம்பால பணிக்கான இரும்பு கம்பிகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலத்தில் ரெயில்வே மேம்பால பணிக்கான இரும்பு கம்பிகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கட்டுமான பொருட்கள்

சேலம் முள்ளுவாடிகேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பகுதியில் இரும்பு கம்பிகள், சிமெண்டு குழாய்கள், ஜல்லி கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் அங்கிருந்து இரும்பு கம்பிகளை 2 பேர் திருடி சென்றனர். இதை பார்த்த கட்டுமான நிறுவன ஊழியர்கள் சிலர் இரும்பு கம்பிகளை திருடிச்சென்ற 2 பேரை பிடித்து சேலம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில், அவர்கள் சேலம் குகை பஞ்சந்தாங்கி ஏரி பகுதியை சேர்ந்த கதிர்வேல் (வயது 53), கிச்சிப்பாளையத்தை சேர்ந்த குமார் (36) என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் கட்டுமான பணிக்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து திருடி வந்த இரும்பு கம்பிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்