< Back
மாநில செய்திகள்
ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருடிய 2 பேர் கைது
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருடிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
9 Oct 2023 11:23 PM IST

ஜோலார்பேட்டை அருகே ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜோலார்பேட்டையை அடுத்த தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் குருபரன் (வயது 55). இவர் கடந்த 6-ந் தேதி திருப்பத்தூர் பகுதியில் உள்ள வங்கியில் ரூ.1 லட்சம் எடுத்து அதனை தனது ஸ்கூட்டர் சீட்டுக்கு அடியில் வைத்துக் கொண்டு சென்றார். பாச்சல் பகுதியில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுவிட்டு வந்தபோது மர்ம நபர்கள் ரூ.1 லட்சத்தை திருடிச்சென்று விட்டனர்.

இது குறித்து ஜோலார்பேட்டை போலீசில் குருபரன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் தாமலேரிமுத்தூர் கூட்ரோடு அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காவெட்டிபுரம் ஒஜிகுப்பம் பகுதியை சேர்ந்த பாபு (46), ரமேஷ் (42) என்பதும், ஸ்கூட்டியில் ரூ.1 லட்சம் திருடியதும் தெரிய வந்தது. திருடிய பணம் மற்றொரு நண்பரிடம் இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்