< Back
மாநில செய்திகள்
செல்போன் பறித்த 2 பேர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

செல்போன் பறித்த 2 பேர் கைது

தினத்தந்தி
|
30 Sept 2023 1:08 AM IST

செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி உறையூர் செட்டித்தெருவை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 20). ஆட்டோ டிரைவரான இவர் தில்லைநகர் வடவூர் பகுதியில் சம்பவத்தன்று இரவு ஆட்டோவில் சென்றார். அப்போது அவரது ஆட்டோவை வழிமறித்த 2 பேர். கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போனை பறித்த வடவூரை சேர்ந்த பவித்ரன் (22), தென்னூரை சேர்ந்த கார்த்திக் (20) ஆகியோரை கைது செய்தனர்.

தற்கொலை

*துறையூர் ஆத்தூர்ரோட்டை சேர்ந்தவர் ஹரிஷ்குமார் (25). இவர் உறையூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இரவுப்பணி பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்ததாகவும், இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஹரிஷ்குமார் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

மருத்துவமனையில் திருடியவர் சிக்கினார்

*திருச்சி அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை வார்டில் கை கழுவும் அறை அருகே வைத்திருந்த இரும்பு குழாயை மர்ம நபர் நேற்று முன்தினம் திருடினார். இதை பார்த்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து அரசு மருத்துவமனை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த செந்தில்குமார் (வயது 42) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

போலி பாஸ்போர்ட் வைத்திருந்தவர் கைது

*சிவகங்கை மாவட்டம், நரகம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(51). இவர் நேற்று மதியம் 3.45 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சியில் இருந்து துபாய் செல்ல இருந்தார். அப்போது அவரை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலைைய சேர்ந்த கிருஷ்ணனின் மகன் தவமணி என்ற போலியான முகவரியில் அவர் பாஸ்போர்ட் பெற்று கத்தார் நாட்டிற்கு சென்று, அங்கு போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்றதை கண்டுபிடித்து மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைத்தனர். இது குறித்து ஏர்போர்ட் போலீசார் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்