< Back
மாநில செய்திகள்
காரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

காரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

தினத்தந்தி
|
25 Jun 2023 12:50 AM IST

நெல்லை அருகே காரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் போலீசார் தாழையூத்து ராஜவல்லிபுரம் ரோட்டில் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரில் 13 மூடைகளில் 390 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக காரில் இருந்த நாரணம்மாள்புரத்தை சேர்ந்த தளவாய் மாடசாமி (வயது 24) மற்றும் இசக்கி (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்