< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
|10 Oct 2023 2:34 AM IST
அம்பையில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் நேற்று அம்பை ஆர்ச் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தியதில், 900 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அம்பை வழுதூரை சேர்ந்த கணேசன் (23), தருவையைச் சேர்ந்த இசக்கிபாண்டி (19) ஆகியோரை கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியுடன் காரையும் பறிமுதல் செய்தனர்.