திருவள்ளூர்
மது பாட்டில்களை காரில் கடத்திய 2 பேர் கைது
|திருத்தணி,
திருத்தணி நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து காலை மற்றும் இரவு நேரங்களில் கூடுதல் விலைக்கு சிலர் விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண்க்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனையடுத்து அவரின் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் திருத்தணி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது குருவராஜப்பேட்டை- திருத்தணி சாலையில் சந்தேகப்படும்படி காரில் வந்த நபர்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அப்போது காரில் 400 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் மது பாட்டில்கள் கடத்தி வந்த நபர்கள் திருத்தணி அக்கைய நாயுடு தெருவை சேர்ந்த சமியுல்லா (வயது 39), தீனா (40) என தெரிந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் ஓட்டி வந்த கார் மற்றும் அதில் இருந்த 400 மதுபாட்டில்களை பின்னர் சமியுல்லா, தீனா ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.