< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
|5 Sept 2023 2:07 AM IST
திருக்காட்டுப்பள்ளி அருகே மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
திருக்காட்டுப்பள்ளி:
திருக்காட்டுப்பள்ளி போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் மற்றும் போலீசார் அடஞ்சூர் பிரிவு சாலை அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வெள்ளை நிற சாக்கு மூட்டையுடன் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் அந்த மூட்டையில் 96 மதுபாட்டில்கள் இருந்தது. இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வரகூர் குளத்து தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது35), சுரேஷ் (28) என்பதும். இவர்கள் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.