< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
ஆந்திராவில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
|8 May 2023 5:07 PM IST
ஆந்திராவில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்திய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரெயில்நிலையத்தில், ஆந்திராவில் இருந்து ரெயிலில் வந்து இறங்கிய 2 பேர் கஞ்சா கடத்தி வருவதாக கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் ரெயில்நிலையம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சில நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது ரெயில்நிலையத்தில் இருந்து வெளியே வந்த கேரளாவைச் சேர்ந்த ராஜு (வயது 40), லிஜன் (32) ஆகிய 2 பேர் கொண்டு வந்த பைகளில் மொத்தம் 6 கிலோ எடை கொண்ட கஞ்சாப்பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெபதாஸ் தலைமையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 பேரையும் கைது செய்தனர்.