< Back
மாநில செய்திகள்
ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்திய 2 பேர் கைது - 6 கிலோ பறிமுதல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்திய 2 பேர் கைது - 6 கிலோ பறிமுதல்

தினத்தந்தி
|
17 Jan 2023 2:11 PM IST

ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் டிக்கெட் கவுண்டர் அருகே நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் துணிபைகளுடன் சுற்றி திரிந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

அவர்கள் வைத்திருந்த பைகளில் மொத்தம் 6 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த சென்னை ஆவடியை சேர்ந்த முரளி (வயது 62), பெரம்பூரைச் சேர்ந்த டிக்சன் (47) ஆகிய 2 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் ஜெபதாஸ் தலைமையில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்