< Back
மாநில செய்திகள்
170 மது பாட்டில்களை கடத்திய 2 பேர் கைது
அரியலூர்
மாநில செய்திகள்

170 மது பாட்டில்களை கடத்திய 2 பேர் கைது

தினத்தந்தி
|
17 Oct 2023 10:49 PM IST

170 மது பாட்டில்களை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் கல்லகம் ரெயில்வே கேட் பகுதியில் கீழப்பழுவூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் 170 மது பாட்டில்களை கடத்தி வந்த பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடியை சேர்ந்த வேல்முருகன்(வயது 32), அய்யாக்கண்ணு(75) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்