< Back
மாநில செய்திகள்
கூடுவாஞ்சேரி அருகே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது - 1,100 போதை மாத்திரைகள் பறிமுதல்
மாநில செய்திகள்

கூடுவாஞ்சேரி அருகே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது - 1,100 போதை மாத்திரைகள் பறிமுதல்

தினத்தந்தி
|
14 Oct 2022 3:02 PM IST

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1,100 போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே ஊரப்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், கூடுவாஞ்சேரி போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கே சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் கையில் இருந்த பையை சோதனை செய்த போது அதில் ஏராளமான போதை மாத்திரைகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒருவர் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்றும், மற்றொரு நபர் காரனை புதுச்சேரியைச் சேர்ந்த மீரான் பாய் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சுமார் 1,100 போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்