< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது
|15 July 2023 12:15 AM IST
நாகர்கோவிலில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது
நாகர்கோவில்,
நாகர்கோவில் இடலாக்குடி சாஸ்திநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கோட்டார் போலீசாருக்கு நேற்று மதியம் தகவல் வந்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த பாரூக் மகன் முகமது ஆசிப் (வயது 22), மாடசாமி மகன் மதன் (20) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் ேபாலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.