< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 2 பேர் கைது
|29 May 2023 12:30 AM IST
வத்தலக்குண்டு பகுதியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பெனாசீர்பாத்திமா உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுசீந்திரன் மற்றும் போலீசார் வத்தலக்குண்டு பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது வத்தலக்குண்டு அருகே அ.விலக்கு பகுதியில் தேனியை சேர்ந்த அர்ஜூன் (வயது 52), உசிலம்பட்டியை சேர்ந்த வினோத் (33) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.