< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 2 பேர் கைது
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
8 May 2023 12:30 AM IST

பழனி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பழனி தாலுகா போலீசார் நேற்று நெய்க்காரப்பட்டி, கரடிக்கூட்டம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரடிக்கூட்டம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். மேலும் அவர்களை சோதனை செய்தனர். அதில், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த அஜய் (வயது 24), செல்வபாண்டி (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்