< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 2 பேர் கைது
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
16 Dec 2022 9:34 PM IST

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மீன்பிடி துறைமுகம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக, ஜார்ஜ் ரோட்டை சேர்ந்த செல்லையா மகன் பாலமுருகன் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோன்று தூத்துக்குடி காமராஜர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த கருப்பசாமி மகன் நாகமலை (20) என்பவரை தாளமுத்துநகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்